பெண்களுக்கான பெரும் பரிசு! சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்கும் கர்நாடக அரசு...!
big gift for women Karnataka government offers paid menstrual leave
பெண்கள் நலனில் புதிய அத்தியாயம் திறந்துள்ளது கர்நாடக அரசு.மாநிலத்தின் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கும் முடிவை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் “மாதவிடாய் விடுமுறை கொள்கை – 2025” என்ற பெயரில் முன்வைக்கப்பட்ட திட்டம் இப்போது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், ஒப்பந்தம் அல்லது வெளிகுத்தகை அடிப்படையில் பணிபுரியும் எல்லா பெண் ஊழியர்களுக்கும் மாதம் ஒரு நாள், ஆண்டுக்கு 12 நாட்கள் வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
மாதவிடாய் விடுமுறையைப் பயன்படுத்தாத மாதங்களில் அதை அடுத்த மாதத்துக்கு மாற்றி சேர்க்க முடியாது எனவும், இந்த விடுமுறைக்காக மருத்துவ சான்றிதழ் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த விதி 18 முதல் 52 வயது வரை உள்ள பெண் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பேராசிரியை சப்னா கிறிஸ்ட் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, முதலில் 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை வழங்க பரிந்துரைத்தது. பின்னர், பெண்களின் உடல் மற்றும் மனநலத்தை கருத்தில் கொண்டு அதனை 12 நாட்களாக உயர்த்திய பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.பெண் ஊழியர்கள்
இந்த தீர்மானம் வெளிவந்தவுடன், பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நன்றி வெள்ளத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் “கர்நாடகா,பெண்களுக்கு முன்னோடி மாநிலம்!” எனப் பெருமிதக் கருத்துக்கள் பரவலாக வெளிவந்துள்ளன.
English Summary
big gift for women Karnataka government offers paid menstrual leave