ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருக்கணும்...!- ராஷ்மிகாவின் உருக்கமான வெளிப்பாடு - வைரல் வீடியோ - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவின் பிரபல நட்சத்திர ஜோடி,ராஷ்மிகா மந்தன்னா மற்றும் விஜய் தேவரகொண்டா, மீண்டும் ஒரு முறை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

தெலுங்கு திரைப்பட உலகின் சூடான ஜோடியாக விளங்கும் இவர்கள், கடந்த மாதம் ஹைதராபாத் நகரில் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவியது. காதல் செய்திகளைப் போலவே, இந்த நிகழ்ச்சியையும் இருவரும் அமைதியாக மறைத்துக் கொண்டிருந்தனர்.

எனினும், ராஷ்மிகாவின் விரலில் மின்னும் நிச்சயதார்த்த மோதிரம், “ரகசியம் சொல்லாமலேயே சொன்னது” என ரசிகர்கள் கிண்டலாகக் கூறினர்.இதனிடையே, நடிகர் ஜெகபதி பாபு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷ்மிகாவிடம், அந்த மோதிரம் குறித்த கேள்வி எழுந்தது.

அதற்கு அவர் சிரித்தபடி, “இது என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று” எனக் கூறி கண்ணடித்து பதிலளித்தது, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நேரத்தில், இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள் என்ற செய்தியும் பரவியது. ஆனால் இதுகுறித்து இருதரப்பும் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘தி கேர்ள்பிரண்ட்’ திரைப்படத்தின் வெற்றிவிழாவில் ராஷ்மிகா உரையாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன்; ஏனென்றால் அது ஒரு வரம்” என்று உருக்கமாகப் பேசியார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து கைதட்டினர்.அதே நிகழ்ச்சியில், விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவுடன் கைகுலுக்கி, பின்னர் அன்புடன் கையை முத்தமிடும் காட்சி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் தீப்பிடித்தது போல பரவி வருகிறது.ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா,திரை உலகில் கவர்ச்சியான ஜோடியாக மட்டுமல்ல, உண்மையிலேயே காதல் கதை உருவாக்கும் நட்சத்திரங்கள் என்றும் ரசிகர்கள் பெருமையாகச் சொல்லி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There should Vijay Deverakonda everyones life Rashmikas heartfelt expression Viral video


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->