பாகிஸ்தானிலிருந்து தூரம் என்றாலும் பாதுகாப்பு தளரக்கூடாது!- தமிழகம் குறித்து அண்ணாமலை கடும் எச்சரிக்கை
Despite distance from Pakistan security should not be relaxed Annamalai warns strongly about Tamil Nadu
இன்று கோவை மாவட்டம் நீலம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தபோது, தனது கூர்மையான கருத்துகளை வெளிப்படுத்தினார்.

அவர் தெரிவித்ததாவது,“தமிழகத்தின் பொருளாதார சக்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சி காரணமாக, மற்ற மாநிலங்களை விட பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. நமது மாநிலம் தொழில், வர்த்தகம், முதலீடு என பல துறைகளில் முன்னிலையில் இருப்பதால், சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்கள் பயங்கரவாதிகளின் குறிவைக்கும் இலக்குகளாக மாறக்கூடும்.
இந்த சூழலில், அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் கோடுகளைத் தாண்டி, தமிழ்நாட்டின் பாதுகாப்புக்காக ஒன்றுபட்டு செயல்படுவது அவசியம். குறிப்பாக முதல்வர், பயங்கரவாத அச்சுறுத்தல் விவகாரத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்தி, சிறப்பு நுண்ணறிவு அணிகளை தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
அப்போதுதான் நாம் அனைவரும், நீங்களும் நானும்,பாதுகாப்பாக வாழ முடியும்.மேலும் அவர், “காஷ்மீர், டெல்லி போன்ற இடங்கள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ளன. டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.
தமிழகம் புவியியல் ரீதியாக பாகிஸ்தானிலிருந்து தூரத்தில் இருந்தாலும், இலங்கை எல்லையை ஒட்டிய நம்முடைய கடற்கரை பரப்பை கருத்தில் கொள்ளும் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் அவசியம். டெல்லி மீது இருந்த அச்சுறுத்தல் அளவிற்கு அல்லாதபோதிலும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மிக முக்கியம்” என்றார்.
English Summary
Despite distance from Pakistan security should not be relaxed Annamalai warns strongly about Tamil Nadu