பயங்கரவாதம் அல்ல... பாதுகாப்பு பிழை தான் வெடித்தது...! -காஷ்மீர் முதலமைச்சரின் தைரியமான பேச்சு
It was not terrorism security blunder that caused explosion Kashmir Chief Minister courageous speech
டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10-ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
மத்திய அரசு, “இது பயங்கரவாத தாக்குதல்” என உறுதி செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.இந்நிலையில், டெல்லி வெடிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கடும் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அவர்,“ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு மக்களும் பயங்கரவாதிகள் அல்ல. சில தனி நபர்களின் செய்கைகளால் முழு சமூகத்தையும் குற்றவாளிகளாகக் கருதுவது தவறு.இப்படி மக்கள் மீது ஒரே நிறத்தை பூசும் அரசியல், அமைதியையும் சகோதரத்துவத்தையும் அழிக்கும் விஷம் போன்றது.
டெல்லி வெடிப்புக்கு காரணம், மத்திய அரசின் பாதுகாப்பு அமைப்பின் தளர்ச்சி தான்!”.அவரது இந்த நேரடி குற்றச்சாட்டு மற்றும் “மக்கள் அல்ல, சிலர்தான் குற்றவாளிகள்” என்ற வாக்கியம், அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
It was not terrorism security blunder that caused explosion Kashmir Chief Minister courageous speech