ஆபாச படம் பார்த்த இளைஞர்..8 வருடம் கழித்து சிக்கினார்..! காவல்துறையினரின் அதிரடி.!
chennai young boy arrested for watching porn videos
தமிழகத்தில் சிறார்களின் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்களின் பெயர் பட்டியலை சேகரித்து அந்த பட்டியலில் உள்ள நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரையில் தமிழகம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட நபர்கள் கைதான நிலையில், அந்த வரிசையில் சென்னை அம்பத்தூரில் ஹரீஷ் என்கிற இளைஞரை சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்த காரணத்தினால் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஹரீஷ் 500 வீடியோக்களை வரை பதிவிறக்கம் செய்து வைத்திருந்தது தெரிவந்தது. தான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே ஆபாசப் படங்களை பார்ப்பதை பொழுது போக்காக வைத்திருப்பதாக போலீஸ் விசாரணையில் ஹரீஷ் தெரிவித்துள்ளார்.
சிறார்களின் ஆபாச படங்களை பார்ப்பதும், அந்த படத்தை பதிவிறக்கம் செய்வதும், சமூக வலைத்தளங்களான முகநூல், வாட்ஸ் ஆப் மூலமாக பரப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலையில் காவல்துறையினரின் பல்வேறு எச்சரிக்கைகளையும் மீறி தொடர்ந்து அந்த மாதிரி வீடியோக்களை பார்த்து வந்த ஹரீஷ் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே தமிழகத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்த வழக்கில் முதல்முறையாக கைது செய்யப்பட்ட திருச்சியை சேர்ந்த அல்போன்ஸ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
English Summary
chennai young boy arrested for watching porn videos