பழிக்குப்பழி கொலை?.. வில்லிவாக்கத்தில் 21 வயது ரவுடி 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை.!!
Chennai Villivakkam 21 Aged Rowdy Alex Murder by 3 Man Gang Police Investigation Going On 2 July 2021
பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் 21 வயது ரௌடி வில்லிவாக்கத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பாரதி நகர் முதல் தெருவை சார்ந்தவர் அலெக்ஸ் (வயது 21). 21 வயதாகும் அலெக்ஸ் தனது ஏரியாவில் ரௌடியாக வலம்வந்த நிலையில், இவனின் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன.
இவன், வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த கருணாகரன் என்பவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவராக இருந்த நிலையில், கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமினில் வெளியாகி வந்துள்ளான். மேலும், தனது உயிருக்கு எப்போது வேண்டும் என்றாலும் ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணி பெங்களூரில் வசித்து வந்துள்ளான்.

மேலும், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னைக்கு வந்துள்ளான். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே அலெக்ஸ் செல்போனில் பேசிக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அலெக்ஸை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றது.
மர்ம கும்பலின் தாக்குதலால் நிலைகுலைந்து போன அலெக்ஸ், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயராகவன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அலெக்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில் வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த ஆடு சரவணன், ரஞ்சித் ஆகியோர் அலெக்ஸை கொலை செய்தது உறுதியானதால், அவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் கைதான பின்னர் கொலைக்கான காரணம் தெரியவரும்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Villivakkam 21 Aged Rowdy Alex Murder by 3 Man Gang Police Investigation Going On 2 July 2021