சென்னையில் பட்டா கத்தியால் வெட்டிக்கொண்ட இருதரப்பு : மோதலில் 4 பேர் படுகாயம்., 5 பேர் கைது.!
chennai velachery clash in two groups
வேளச்சேரியில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : வேளச்சேரியில் இறுதி சடங்கு நிகழ்ச்சியின்போது இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொண்டனர். இது சம்பந்தமாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளியான கலையரசனின் இறுதி ஊர்வலத்தில், வினோத்குமார், மணிகண்டன் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டதில், 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலின்போது ஒருவரை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இதில் காயமடைந்த சுதாகர், ராஜா, பாலாஜி, மணிகண்டன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மணிகண்டன், நேதாஜி, சுரேஷ், கோபி, வினோத் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
English Summary
chennai velachery clash in two groups