சென்னை: பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: உ.பி. இளைஞர் கைது!
chennai velacherry bus stand abuse case
சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தப் பெண்களிடம் பாலியல் ரீதியாக ஆபாசச் செயலில் ஈடுபட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம்: நேற்று இரவு வேளச்சேரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தப் பெண்களிடம் ஒரு நபர் அருவருக்கத்தக்க வகையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
புகாரும் வீடியோவும்: அந்நபர் ஆபாசச் செயலில் ஈடுபட்டதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் தெரிவித்தனர். மேலும், அவர் மீண்டும் அதே செயலில் ஈடுபட்டபோது, சிலர் அதைப் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
கைது: சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட போலீஸார் அந்த நபரைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.
கைதான அந்த நபர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பதும், அவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்களிடம் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
chennai velacherry bus stand abuse case