இன்று வெளியாகிறது சென்னை பல்கலைகழகத்தின் பருவத் தேர்வு முடிவுகள்.! - Seithipunal
Seithipunal


சென்னை பல்கலைக் கழகத்தின் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான 2023-24ம் கல்வியாண்டு நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

பி.காம், முதுநிலை மாணவர்கள், https://egovernance.unom.ac.in/results என்ற இணையதளத்திலும், பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., சமஸ்கிருதம், உருது, அரபு மொழித் தேர்வு முடிவுகளை https://exam.unom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். முடிவுகள் வெளியான பிறகு, மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் 5-ந்தேதிக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீட்டிற்கு ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கான தொகையை, 'பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்' என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும். இளநிலை மாணவர்கள் மறுகூட்டலுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 5-ந்தேதிக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.300 கட்டணத்தை 'பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்' என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai university semaster exam result


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->