சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!
Chennai TASMAC Staff Protest
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது..
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் தலைமைச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போராட்டக்காரர்கள் வலியுறுத்தும் முக்கிய கோரிக்கைகள்:
* அரசு அறிவித்த ரூ.2,000 ஊதிய உயர்வை அனைத்து ஊழியர்களுக்கும் முழுமையாக வழங்க வேண்டும்.
* டாஸ்மாக் நிர்வாகக் குழுவின் 218வது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஊதிய உயர்வுக்கான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.
* விசாரணை இல்லாமல் தண்டனை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும். (உதா: இடமாற்றம், பணி நீக்கம், அபராதம் போன்றவை ஒரே தவறுக்காக வழங்கப்படக்கூடாது).
* மின்னணு இயந்திரங்களின் அடிப்படையில் விற்பனை இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதையும் நிறுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்கும்வரை போராட்டம் தொடரப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
English Summary
Chennai TASMAC Staff Protest