சாக்கடையில் தவறி விழுந்து பச்சிளம் குழந்தை மரணம்.. பெற்றோர்களே அலட்சியம் வேண்டாம்.! - Seithipunal
Seithipunal


கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக பலியான சோகம் அரங்கேறியுள்ளது. 

சென்னையில் உள்ள தாம்பரம் முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியைச் சார்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி ஜெப செல்வி. இவர்களுக்கு மூன்று வயதுடைய சாய்சரண் என்ற ஆண் குழந்தை இருக்கிறான். 

எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்த விஜயகாந்த் பணி நிமித்தமாக திருவண்ணாமலைக்குச் சென்று விட்ட நிலையில், வீட்டில் ஜெப செல்வி தனது குழந்தையுடன் தனியாக இருந்து வந்துள்ளார். நேற்று மதிய நேரத்தில் ஜெப செல்வி வீட்டில் இருக்கையில், வீட்டின் வாயில் கதவின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சாய்சரண் திடீரென மாயமாகி இருக்கிறான். 

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெப செல்வி பல இடங்களில் குழந்தையை தேடி கதறி அழுத நிலையில், இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை தேடிய போது, வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.

உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடலை பார்த்து ஜெப செல்வி கதறி அழுதது கண்கலங்க செய்தது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பீர்க்கான்கரணை காவல்துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் அலட்சியத்துடன் இருக்கக்கூடாது என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Tambaram Mudichur child Sai Saran Died Sewage Drain Line Police Investigation


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->