4 மணிநேரம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. பொய் புகார் கொடுப்போம் என மிரட்டல்.. சென்னையில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூர் பகுதியை சார்ந்த 27 வயது இளம்பெண், அங்குள்ள சி.டி.ஓ காலனி பகுதியில் உள்ள மருத்துவர் தீபக் (வயது 28) என்பவரின் இல்லத்தில் கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி வேலையில் இருந்து நின்றுள்ளார்.

இதனையடுத்து தான் பணியாற்றி வந்த 18 நாட்கள் சம்பளத்தை வாங்க தீபக்கின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர் தீபக் மற்றும் அவரது உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் (வயது 35) ஆகியோர்கள் இருந்துள்ளனர். இருவரும் சம்பள பாக்கி தருவதாக பெண்மணியை அறைக்குள் பூட்டி வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். 

4 மணிநேரம் அறைக்குள் அடைத்து வைத்து பெண்மணிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த காமுகன்கள், ஆசைக்கு இணங்காவிடில் திருட்டு புகார் கொடுத்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். பெண்மணியின் தொடர் போராட்டத்தால் ஆத்திரமடைந்த இருவரும், காவல் துறையினருக்கு திருட்டு தொடர்பான போலி தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த காவல் தாம்பரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கையில், பெண்மணியின் உடலில் நக கீறல்கள் மற்றும் ஆடைகள் கிழிந்து இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் பெண்ணிடம் விசாரணை செய்கையில், காமுகன்களின் சுயரூபம் தெரியவந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Tambaram girl Sexual Torture Police Arrest Culprits 30 Dec 2020


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal