சென்னையில் உலா வரப்போகும் தனியார் பேருந்துகள்!  - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சிக்குட்டபட்ட அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசின் மாநகர் போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது. மொத்தம் 625 வழித்தடங்களில் 3436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாள்தோறும் சுமார் 29 லட்சம் பயணிகள் மாநகர பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். தமிழக அரசின் பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, 
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், 
ஒரு நாள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு,
30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு
உள்ளிட்ட பல திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்து கழகம் அனுமதி கொடுக்க முடிவு செய்துள்ளது. 

"Gross Cost Contract" என்ற முறையில் இதனை செயல்படுத்தவும் மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் 500 தனியார் பேருந்துகளையும், 2025-ல் 500 பேருந்துகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் இந்த திட்டம் போல், ஏற்கனவே பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு தோல்வி அடைந்து உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai private bus service soon


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->