சென்னை | இடிந்து விழும் நிலையில் இருக்கும் காவலர்கள் குடியிருப்பு! அச்சத்தில் குடும்பத்தினர்! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர காவல் துறையினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் இடிந்து விழும் நிலையில் இருக்கிறதாக காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். 

சென்னையில் காவலர்கள் குடியிருப்பு பல இடங்களில் கட்டப்பட்டுள்ளது. அந்த குடியிருப்புகளில் காவல்துறையினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 

கீழ்ப்பாக்கத்தில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் வசிப்பவர்கள் காலி செய்யுமாறு பலமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை காவல் கமிஷனர் அலுவலகத்தை சில நாட்களுக்கு முன்பு போலீசாரின் குடும்ப பெண்கள் முற்றுகையிட்டு மனு அளித்தார்.

அதில், மாற்று இடம் ஒதுக்காமல் எங்களை காலி செய்யுமாறு தெரிவித்தால் நாங்கள் எங்கே செல்வோம். உரிய குடியிருப்புகளை அடையாளம் தெரிவித்துவிட்டு எங்களை காலி செய்ய சொல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பை போன்று சென்னையில் பல இடங்களில் உள்ளது. 

ஆனால் அது தொடர்பாக போலீசார் புகார் அளிக்க தயங்குகின்றனர். கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட காவலர்கள் குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். 

அது போன்ற வீடுகளில் தங்கி இருப்பவர்கள் பயத்துடன் இருக்கின்றனர். அதிலும் ஒரு சிலர் குடியிருப்புகளுக்கு அருகிலேயே வாடகை வீடுகள் எடுத்து தங்கி வருகின்றனர். 

எனவே உயர் அதிகாரிகள், காவலர்கள் குடியிருப்புகளின் தரத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் குடும்பத்தை காக்கும் வகையில் புதிய வீடுகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai police quarters state collapse


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->