சென்னை || விடுமுறைக்கு பிறகு சென்னை திரும்பும் மக்கள்.! போக்குவரத்து நெரிசலால் அவதி.!
chennai paranoor tolgate traffic
இந்த மாதம் முதல் வாரத்தில் காந்தி ஜெயந்தி, தசரா,ஆயுத பூஜை, மிலாடி நபி என்று தொடர் விடுமுறை நாட்கள் வந்தது. இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது.

இதுமட்டுமல்லாமல், ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பத்தொடங்கியுள்ளனர்.
இதனால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
English Summary
chennai paranoor tolgate traffic