'ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்குவது, அவரது தனிப்பட்ட முடிவு; அவர் விரும்பும் வரை இங்கு தங்கலாம்'; மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்..!
Union Minister Jaishankar says Sheikh Hasina can stay in India as long as she wants
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்குவது, அவரது தனிப்பட்ட முடிவு. இந்தியாவில் அவர் விரும்பும் வரை தங்கலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். அத்துடன், வங்கதேசம் உடனான நிலையான உறவுகளை எதிர்பார்க்கிறதாகவும், அவர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இங்கு வந்த அவர், இந்தியாவில் இருந்து திரும்பி செல்வது அவர்தான் முடிவு செய்ய வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ஜெய் சங்கர் கூறுகையில், வங்கதேசத்தில் நம்பகமான மற்றும் ஜனநாயக அரசியல் நிலைப்பாட்டு இந்தியாவின் நீண்டகால விருப்பம் என்றும் தெரிவித்துள்ளதோடு, வங்கதேசத்தில் உள்ள மக்கள், குறிப்பாக இப்போது ஆட்சியில் இருப்பவர்கள், முன்பு தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பது குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். இப்போது பிரச்சினை நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் என்று கூறியுள்ளார்.

வங்கதேசத்தில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு அரசுக்கு எதிராக இளைஞர் போராட்டம் நடைபெற்றது. அது வன்முறையாக மாறியதில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இழந்த்தோடு, அந்நாட்டை விட்டு வெளியேறிய இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
அதாவது, போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை கொடூரமாக அடக்க முயன்றதாக ஷேக் ஹசீனா மீது அந்த நாட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்ட மூன்று ஊழல் வழக்குகளுக்காக, 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Union Minister Jaishankar says Sheikh Hasina can stay in India as long as she wants