விவசாயிகளின், தொழிலாளிகளின் தொழில் வளர்ச்சியை கண்டுகொள்ளாத திமுக அரசு நீக்கப்பட்டால் தான் தமிழகத்துக்கு நிஜமான விடிவுகாலம்; திருவண்ணாமலையில் நயினார் நாகேந்திரன்..! - Seithipunal
Seithipunal


மாற்றத்தை நோக்கிய தமிழகம் என்ற பிரம்மாண்ட கூட்டம் திருவண்ணாமலை நடந்தது. இதில்,தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.  இது குறித்து அவர் தனது சமுக வலைத்தளமான எக்ஸ்-இல் பதிவிட்டுள்ளதாவது:

''தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் யாத்திரைக்காக திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு செல்லும் வழியில் மதுராந்தகத்தில் செங்கல்பட்டு மாவட்ட பட்டியல் அணித் தலைவர் திரு தாமோதரன் அவர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அங்கிருந்த அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

பாஜக பட்டியலணி மாநிலத் தலைவர் திரு. சம்பத்ராஜ் அவர்கள், பாஜக செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் திரு. Dr. M. பிரவீன்குமார் அவர்கள், பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் திரு. N. ரகுராமன் அவர்கள் உடனிருந்தார். போளூர் விவசாயத்திற்கும், நெசவுத் தொழிலுக்கும்  பெயர் பெற்றது. அங்கு இதை ஒட்டிப் பல தொழில்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த அரசு இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதையும், இங்குத் தயாரிக்கப்படும் துணிகளுக்குத் தமிழகம் முழுக்க நல்ல வரவேற்பு இருந்தும், அரசின் பாராமுகம் காரணமாக நெசவுத் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளையும், எடுத்துக்கூறி, இவற்றுக்கெல்லாம் இந்த அரசு எதுவுமே செய்யவில்லை.

விவசாயிகளையும், தொழிலாளிகளையும், தொழில்வளர்ச்சியையும் கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளாத இந்த அரசு நீக்கப்பட்டால்தான் தமிழகத்துக்கு நிஜமான விடிவுகாலம்.

இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர்கள் திரு. கருப்பு முருகானந்தம் அவர்கள் மற்றும் கார்த்திகாயினி அவர்கள், மாநிலச் செயலாளர் திரு. கோ. வெங்கடேசன் அவர்கள் , பாஜக திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் திருமதி. B. கவிதா வெங்கடேசன் அவர்கள், திரு K S ராதாகிருஷ்ணன் அவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி MLA அவர்கள்,
அதிமுக திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் திருமதி. ஜெயசுதா லட்சுமிகாந்தன் EX MLA அவர்கள், அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. தூசி மோகன் EX MLA அவர்கள் உடன் இருந்தனர்.

சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் விஜயநகரப் பேரரசுகளால் ஆளப்பட்ட வளமான மண், முகலாயப் படையெடுப்பில் தன்னைப் பலிதானியாகக் கொடுத்த மூன்றாம் வீரவல்லாளனைப் பெற்ற வீரம் விளைந்த மண், அண்ணாமலையாரின் பரிபூரண அருளைப் பெற்ற ஆன்மீக மண் இத்தனை பெருமைகளைக் கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் நமது இன்றைய பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது எல்லையில்லா மகிழ்ச்சியளிக்கிறது.

உலகளவில் புகழ்பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் திமுக ஆட்சியில் சீரழிந்து திக்குமுக்காடிப் போயுள்ளது. திருவண்ணாமலையின் நீர் நிலைகள் முறையான பராமரிப்பின்றி காய்ந்து வறண்டு போயுள்ளது. இம்மாவட்டத்தின் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து செய்வதறியாது தவிக்கிறார்கள். ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாக இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தை மொத்தமாக சிதைத்து வைத்துள்ள 
திமுகர்  அரசை, அம்மாவட்ட மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.'' என்று நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nagendran said that the real dawn for Tamil Nadu will come only if the DMK government is removed


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->