சூடானில் கொடூரம்; ஆயுத குழுக்கள் ட்ரோன் தாக்குதலில் 33 பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் பரிதாபமாக பலி..! - Seithipunal
Seithipunal


சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ஆர்எஸ்எப் எனப்படும் ரேபிட் சப்போர்ட் போர்சஸ் என்ற ஆயுத மேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில், சூடானின் கோர்டோபான் மாகாணத்தில், கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை மீது  ஆர்எஸ்எப் ஆயுத குழு நேற்று இரவு ட்ரோன் ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 33 அப்பாவி குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து சூடான் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

ஆயுத குழுவினர், முதலில் மழலையர் பள்ளியைத் தாக்கியதாகவும், பின்னர் பொதுமக்கள் உணவுக்காக உதவி வாங்க கூடியிருந்த இடத்தில் இரண்டாவது தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதில், 33 குழந்தைகளுக்கும் அடங்குவர் என்று குறிப்பிட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை என்று மருத்துவர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

50 people including 33 school children tragically died in a drone attack by armed groups in Sudan


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->