புடின் விருந்தில் கலந்துக்கொண்ட விவகாரம்: நான் சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என காங்கிரஸ் எம்பி சசி தரூர் விளக்கம்..!
Congress MP Shashi Tharoor explains that he does not want to get into controversy
ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்தில் கலந்து கொண்டது குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு விருந்து வைப்பது நாங்கள் செய்யும் மரியாதை என்றும், அந்த விருந்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு மிகவும் அன்பான உரையை நிகழ்த்தியதாகவும், அதற்குப் பதிலளித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மிகவும் அன்பானவர் என்று கூறியுள்ளார்.
அத்துடன், இந்த விருந்தில் ஏராளமான ரஷ்ய பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும், அவர்களுடன் பல மூத்த இந்திய அதிகாரிகளும் கலந்து கொண்டனர என்றும் கூறியுள்ளார். மேலும், நான் சர்ச்சைகளில் சிக்க விரும்பவில்லை. சிலர் அழைக்கப்படாததற்கு நான் வருந்துகிறேன். அது நடந்தது ஒரு அவமானம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தன்னை பொறுத்தவரை, வெளியுறவு விவகாரங்களில் எனக்கு ஈடுபாடு உள்ள ஒரு வேலை இருக்கும் போது, ஒரு வெளிநாட்டு அதிபரை கௌரவிக்கும் விருந்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பை நிராகரிப்பது பொருத்தமானது என்று நான் தான் நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நம்மைப் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அங்கு இருந்திருக்கலாம் என்று தான் நிச்சயமாக உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு நல்ல விஷயமாக இருந்திருக்கும் எனவும், பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவராக தான் விருந்தில் பங்கேற்ற்றதாகவும், அவர் சில சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியதாகவும் சசி தரூர் விளக்கமளித்துள்ளார்.
English Summary
Congress MP Shashi Tharoor explains that he does not want to get into controversy