பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் நேரில் ஆஜராக வேண்டும் - வேதனையுடன் நீதிபதி போட்ட உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில், கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதே வழக்கில் கைதான 7 மாணவர்களில் இருவர் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, "குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மருத்துவமனைகளில் சேவை போன்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்படும்; ஆனால், அவர்கள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்," என்று வேதனை தெரிவித்தார். 

நீதிமன்றத்தின் இந்த இரக்கப்பூர்வமான நடவடிக்கையை தவறாக பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தை மாணவர்களிடையே உருவாக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். 

இதனைத் தொடர்ந்து, ஜாமின் கோரிய மாணவர்களின் பெற்றோருடன் நேரடியாகப் பேச வேண்டும் எனக் கூறிய நீதிபதி, அவர்கள் நவம்பர் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai pachayappan college student murder case hc order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->