கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி... இரத்தவெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்.. சென்னையில் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியில் உள்ள அரிசி ஆலையில், ஒடிசாவை சார்ந்த ராகுல் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருடன், ராகுலின் மனைவி பூஜாவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இதே அரிசி ஆலையில் ஒடிசாவை சார்ந்த கிஷ்ணா என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். 

கிஷ்ணாவிற்கும் - பூஜாவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் ராகுலிற்கு தெரியவரவே, இருவரையும் கண்டித்துள்ளார். 

கள்ளக்காதல் ஜோடி கள்ளக்காதல் உறவில் பிடியாக இருக்கவே, ராகுலுக்கு கடுமையான ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிஷ்ணாவிடம் ராகுல் தகராறு செய்த நிலையில், கிஷ்ணாவை கத்தியால் குத்தியுள்ளார். இந்த வெறிச்செயலில் கிஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வந்தனர். ராகுல் தலைமறைவாகிய நிலையில், அவர் ஒடிஷாவிற்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, ராகுலை பிடிக்க தனிப்படை காவல் துறையினர் ஒடிஷாவிற்கு விரைந்து சென்றுள்ளனர். கிஷ்ணா கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த உறவினர்கள், ஆத்திரத்தில் ஒடிசாவில் உள்ள ராகுலின் வீட்டினை சூறையாடியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Odisha woman affair Husband Murder boy Police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal