சென்னையில் ரூ.70 கோடி மதிப்புள்ள ''மெத்தபட்டமின்'' பறிமுதல்! 3 பேர் கைது! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஏழு கிலோ எடை கொண்ட, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தப்பட்டமின் போதைப் பொருள் கடத்திய மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். 

மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நபர் நின்று கொண்டிருப்பதாக, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனை அடுத்து அவரை பிடித்து போலீசார் சோதனை செய்ததில், அவரிடம் சுமார் 5.9 கிலோ மெத்தப்பேட்டமின் போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்த அவரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரம் பைசூர் ரகுமான் என்பது தெரிய வந்தது. 

அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டதில், சென்னையை சேர்ந்த மன்சூர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம் தான் இந்த போதை பொருளை அவருக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்களும் இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். 

அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்த குடோனில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அங்கும் சுமார் 900 கிராம் மெத்தபட்டமின் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், மொத்தமாக இவர்களிடம் இருந்து 7 கிலோ மெத்தபட்டமின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு 70 கோடி ரூபாய் என்று தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai NCB raid and arrest


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->