#BREAKING:: சென்னை மாநகர் அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர் முழுவதும் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் 3,436 அரசு பேருந்துகள் 625 வழி தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பல வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளால் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தனியார் பங்களிப்புடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்பாக சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கி மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் 500 பேருந்துகளும், 2025 ஆம் ஆண்டு 500 பேருந்துகளும் என மொத்தம் 1,000 பேருந்துகளை தனியார் பங்களிப்புடன் இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் இத்தகைய செயலுக்கு பெரும்பாலான போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியாவில் மும்பை போன்ற பெரு நகரங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டு தோல்வியடைந்துள்ளது. 

மேலும் தனியார் பங்களிப்புடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டால் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம், பள்ளி மாணவர்கள், ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கான இலவச பேருந்து திட்டம் முழுமையாக பாதிப்படையும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

இத்திட்டம் வியாபார ரீதியில் செயல்படுமே தவிர மக்கள் நல பணியாக இத்திட்டம் செயல்படாது என பெரும்பாலான தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன. இந்த  சூழ்நிலையில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் நாளை காலை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகள் முன்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சி.ஐ.டி.யு சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தொ.மு.ச மற்றும் சி.ஐ.டி.யு போன்ற தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்குரியது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா தொழிற்சங்கங்களும் தமிழக அரசின் இத்தகைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவர்களும் கூடிய விரைவில் போராட்டம் அறிவிப்பார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai MTC bus workers protest against allowing private buses


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->