பச்சிளம் குழந்தை மரண வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.. 11 மாதம் கழித்து கைதான தாய்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை முதலி தெரு பகுதியை சார்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி நதியா (வயது 33). இவர்கள் இருவருக்கும் மூன்றரை வயதுடைய இஷாந்த் என்ற மகன் இருந்த நிலையில், குழந்தை பிறந்ததில் இருந்து மனவளர்ச்சி குன்றி இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கட்டிலில் இருந்து இஷாந்த் தவறி விழுந்ததாக சென்னை அரசு ஸ்டாண்லி மருத்துவமனையில் குழந்தையை நதியா அனுமதி செய்துள்ளார். 6 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், 11 மாதங்களுக்கு பின்னர் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது. இதில், உயிரிழந்த குழந்தையின் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால், குழந்தையின் மண்டை ஓடு உடைந்து உயிரிழந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணையில் கிடப்பில் இருந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்த காவல் துறையினர், நதியாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Korukkupet Child Death after 11 Month Mother Arrest Mortuary report Confirm Baby Murder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal