நாமக்கல் || பள்ளி விடுதியில் மாணவன் தற்கொலை செய்த வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் || பள்ளி விடுதியில் மாணவன் தற்கொலை செய்த வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மோகன்ராஜ் என்ற மாணவன் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி அன்று பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய போலீஸாரின் விசாரணையில், சக மாணவர்கள் தகராறு செய்ததாலும், பள்ளியின் தாளாளர் மற்ற மாணவர்கள் முன்னிலையில் மோகன்ராஜை அடித்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த நாமக்கல் சிபிசிஐடி போலீஸார், இது தற்கொலை என்று வழக்கை முடித்து நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை நிராகரித்த நாமக்கல் நீதிமன்றம் பள்ளியின் தாளாளரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பள்ளியின் தாளாளர் தங்கவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி எம் நிர்மல் குமார், "பள்ளியில் தங்கி படிக்கும் மாணவனைக் கவனிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. மாணவர்கள் சக மாணவர்கள் பிரச்சினை செய்வது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தும் அதைக் கண்டிக்காமல் இருந்தது தவறு.

இந்த வழக்கை போலீஸாரும் சாதாரணமாக விசாரணை செய்துள்ளனர்.  இந்த வழக்கை நாமக்கல் நீதிமன்றம் கோப்புக்கு எடுத்துள்ளதால், இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட முடியாது" என்றுக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court dispose case of school student sucide in namakkal


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->