#Breaking: போக்ஸோ சட்டத்தில் திருத்தம். இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் - சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


போக்ஸோ சட்டத்தில் திருத்தும் கொண்டு வர சரியான தருணம் இது. காதல் உறவில் உள்ள பதின் பருவ இளைஞர்கள், போக்ஸோ சட்டத்தால் தங்களின் வாழ்க்கையை இழந்துள்ளனர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் வருடத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக போக்ஸோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஆட்டோ ஓட்டுநர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். 

இதனையடுத்து, இந்த திருமணத்திற்கு போக்ஸோ வழக்கு தடையாக இருப்பதால், போக்ஸோ வழக்கை இரத்து செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், வெங்கடேஷ் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

காணொளி மூலமாக விசாரணைக்கு ஆஜராகிய சிறுமியின் தாய், மகளுக்கு திருமணம் செய்ய வேண்டியிருப்பதால் வழக்கை இரத்து செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், " காதல் உறவுகளால் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 

போக்ஸோ வழக்கில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இதுவே தருணம். வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். போக்ஸோ சட்டத்தின் உண்மையான நோக்கங்கள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இளைஞரின் மீதான போக்ஸோ சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடுகிறேன் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High Court Comment about Bokso Complaint Vulnerability For Youngsters


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->