சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; விரைவில் மகளிர் அணி உருவாக்கம் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி..!
CSK CEO Kasi Viswanathan confirms the formation of the CSK womens team
இந்தியாவின் உள்ளோர் கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் தொடர் ஆண்கள் அணி மிக பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இந்த வருடம் 19-வது கோப்பைக்கான 10 அணிகள் பங்கேற்கும் போட்டிகள் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மகளிர் பிரீமியர் லீக் தொடரும் (WPL) நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு WPL தொடங்கும் போது மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, உபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 05 அணிகள் மட்டுமே பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது. எல்லோரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் அணியில் 05 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகளிர் அணி இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் வாரியம் அதற்கு வாய்ப்பில்லை என மறுப்பு தெரிவித்தது.

இடித்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், பெண்கள் கிரிக்கெட் மீதான வர்த்தகத்தின் மீது சிஎஸ்கேவிற்கு நம்பிக்கை இல்லையா? என்ற விமர்சனமும் முன் வைக்கப்பட்டது. அத்தோடு, ஒரு சாரார் அணி கட்டமைப்பதற்கான நிலையான வீரர்கள் கிடைக்கவில்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக, உலகம் முழுவதும் அதிக ரசிகர் பொட்டலங்களை கொண்டுள்ள சென்னை அணியில், பெண்கள் அணி இல்லையே என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்து. இந்தசூழலில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026-இல் சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கலந்துகொண்டார். அப்போது மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜும்தாருடன் அவர், உரையாடலில் ஈடுபட்டார்.
அவரிடம் பேசுகையில் அவர் கூறியதாவது; ''எதிர்வரும் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் தடத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. எங்களுடைய முதல் இலக்காக பெண்கள் கிரிக்கெட் இருக்கிறது. படிப்படியாக மற்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்த உள்ளோம்” என கூறியுள்ளார்.
இதன்மூலம் சென்னை அணி விரைவில் மகளிர் பிரீமியர் லீக்கில் மகளிர் அணியை உருவாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வெல்ல WPL பக்கபலமாக இருந்துள்ளது. இதன் காரணமாக, மகளிர் பிரீமியர் லீக்கை விரிவாக்கும் திட்டத்தில் பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது. அந்தவகையில், WPL-இல் அணிகளை கொண்டிருக்காத சென்னை, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் மகளிர் கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
English Summary
CSK CEO Kasi Viswanathan confirms the formation of the CSK womens team