டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; இலங்கையை புரட்டி எடுத்த 44 வயது வீரர்; ஓமனுக்கு எதிராக படுதோல்வி..! - Seithipunal
Seithipunal


2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி 07 ஆம் தேதி முதல் மார்ச் 08 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட 20 அணிகள் பங்கேற்கவிருக்கின்றன.

இந்நிலையில், 2026 டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஒவ்வொரு அணிகளும் ஈடுபட்டு பெறுகின்றனர். இலங்கை ஏ அணி உடனான பயிற்சி ஆட்டத்தில், ஓமான் அணியின் வீரரான, 44 வயது ஆமிர் கலீமின் மிரட்டலான பேட்டிங்கால் இலங்கை ஏ அணியை 05 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமான் அணி வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த போட்டியில், இலங்கை ஏ அணி வெறும் 145 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது, அந்த இலக்கை ஓமன் அணி, 18-வது ஓவரில் எட்டியுள்ளது.

இலங்கை கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஏ அணி 20 ஓவரில் 09 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக 07வது வீரராக களமிறங்கி பவுலிங் ஆல்ரவுண்டர் சாஹன் 29 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய 44 வயது வீரர் ஆமிர் கலீம் 47 பந்தில் 08 பவுண்டரிகள் 03 சிக்சர்கள் என பறக்கவிட்டு 80 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். போட்டியில், 18-வது ஓவர் முடிவில் 05 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிய ஓமன் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இலங்கை சீனியர் அணி படு மோசமாக தோற்றுவரும் நிலையில், ஓமனுக்கு எதிராக தங்களுடைய சொந்தமண்ணில் இலங்கை ஜூனியர் அணியும் தோற்றுள்ளமை விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lanka suffered a crushing defeat against Oman in the T20 World Cup practice match


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->