முருகன் பாடலை அவமதித்ததாக குற்றச்சாட்டு; தவெக தலைவர் விஜய் மற்றும் பாடகர் வேல்முருகன் மீது பா.ஜ.க.வினர் புகார்..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா நேற்று பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன், பிரபலமான முருகன் பாடல் ஒன்றை விஜய்யை உருவகப்படுத்தி பாடியிருந்தார். அந்த பாடளுக்கு நடிகர் மரற்கு அக்கட்சியின் தலைவர் விஜய்யும் நடனமாடினார்.

விஜய்யின் இந்த நடனத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்த நிலையில், முருகன் பாடலை இழிவுபடுத்தும் விதமாக பாடியதாகவும், அதற்கு விஜய் சைகை செய்து முருக கடவுளை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டதாக கூறி, விஜய் மீதும், அக்கட்சி நிர்வாகி ராஜ்மோகன் மீதும், பாடகர் வேல்முருகன் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவரும் நெல்லை போலீசில் புகார் அளித்துள்ளார். 

குறித்த புகார் மனுவில், முருகன் பக்தர்களால் போற்றப்படும் புனித பாடலை, அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பாடப்பட்டதாகவும், இதனால் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக, திருநெல்வேலி மாநகர போலீசார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP members have filed a complaint against TVK leader Vijay for allegedly insulting a song about Lord Murugan


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->