பெங்களூருவில் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்து; பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு; பிரதமர் மோடி இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


நேற்று மாலை பெங்களூருவில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இந்த கனமழை காரணமாக சிவாஜி நகரில் உள்ள அரசு பவுரிங் மருத்துவமனை வெளிப்புறத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட நடைபாதை வியாபாரிகள் 07 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் காயமடைந்துள்ளவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் தள பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

 

''இந்த சம்பவம் மிகவும் துயரமானது. துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக மத்திய பிரதேர மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில் 35 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று நேற்றிரவு அதிவேகமாக சென்றது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், இதில் பயணித்தவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துக் கொண்ட்டுள்ளதோடு, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi expresses condolences to those who lost their lives in the collapse of a government hospital compound wall in Bengaluru


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->