11-ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள்; திமுக ஆட்சியின் வெட்கக்கேடு; எடப்பாடி பழனிசாமி கண்டனம்..! - Seithipunal
Seithipunal


''சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இளைஞர்களை, பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

''ஒரு ஆட்சியாளராக பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் ,Total Failure என்பதற்கு இந்த செய்தியே சாட்சி! அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட 11-ஆம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. 

ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11-ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு? ஆனால், இதையெல்லாம் பற்றி கிஞ்சற்றும் கவலைப் படாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது ஆகப்பெரும் சாபக்கேடு!

கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மூலம், ஸ்டாலின் மாடல் திமுக அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது.

இளைஞர்களை, பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். 

ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆண்டுதோறும் நான் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மாதிரி , வழக்கம் போல "ஓ" போடுவதோடு நிறுத்தாமல், பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் வந்தது எப்படி என தீர விசாரித்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற 02 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.'' என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami condemned the discovery of cannabis with an 11th-grade student as a disgrace to the DMK regime


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->