மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு..!
Yumnam Khemchand Singh has been elected as the new Chief Minister of Manipur state
மணிப்பூரில் மீண்டும் மக்களாட்சியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கியது. இதற்காக மணிப்பூர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம்பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பைரன் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 12-ஆம் தேதியுடன் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இருந்தபோதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைக்க முயற்சி நடைபெற்று வந்த நிலையில் மணிப்பூர் சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் யும்னம் கெம்சந்த் சிங் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். குகி தலைவர் நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Yumnam Khemchand Singh has been elected as the new Chief Minister of Manipur state