அங்கன்வாடியில் குழந்தைக்குக் கொடுத்த உணவைப் பார்த்து அலறிய பெற்றோர்...! முட்டையை உடைத்ததும் உள்ளே இருந்தது என்ன தெரியுமா...?
Parents screamed after seeing food given their child at Anganwadi Do you know what inside egg when you broke it
தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்ட முட்டையை உடைத்தபோது, அதற்குள் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு இருந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.அங்கு 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். சொர்ணமாரி என்பவர் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.இந்த மையத்தில் வாரந்தோறும் திங்கள், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு வயது முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று முட்டைகள் பெற்றோரிடம் வழங்கப்படுகின்றன. மற்ற குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்திலேயே முட்டைகள் வேகவைத்து, உணவுடன் சேர்த்து வழங்கப்படுகின்றன.இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி ஒரு வயது குழந்தையின் பெற்றோரிடம் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டன.
அவற்றில் ஒரு முட்டையை பெற்றோர் வீட்டில் வேகவைத்து, பின்னர் உடைத்துப் பார்த்தபோது அதற்குள் கோழிக்குஞ்சு ஒன்று இறந்து அழுகிய நிலையில் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அந்த முட்டையை அங்கன்வாடி மையத்துக்கு எடுத்துச் சென்று ஊழியரிடம் காண்பித்தனர்.
ஆனால், இதுகுறித்து ஊழியர் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் மற்ற பெற்றோருக்கும் தெரியவந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பத்மா நேற்று ரெகுராமபுரம் அங்கன்வாடி மையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், பிரச்சினைக்குரிய முட்டையின் ஓடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும், அந்த முட்டைகள் அரசு சார்பில் வழங்கப்பட்டவையா அல்லது வெளியில் இருந்து வாங்கப்பட்டவையா என்பது குறித்து ஆய்வு செய்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
English Summary
Parents screamed after seeing food given their child at Anganwadi Do you know what inside egg when you broke it