செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து நடந்த இரு கார் விபத்துகள்; காவலர் ஒருவர் உயிரிழப்பு; சரித்திரப் பதிவேடு குற்றவாளி தப்பியோட்டம்; போலீசார் வலை..! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து நடந்த இரு கார் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. முதல் விபத்தில் மின்கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்ட போது அங்கு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது கார் மோதியதில் காவலர் தினேஷ்குமார் (24) உயிரிழந்த்துள்ளார். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சரித்திரப் பதிவேடு குற்றவாளி தீனா (33) தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த ஒவர்டன்பேட்டை பகுதியில் செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் நேற்று இரவு வெள்ளை நிற மாருதி கார் ஒன்று செங்கல்பட்டு நோக்கிச் சென்ற போது பெட்ரோல் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் முறிந்ததால் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்களை மற்ற வாகன ஓட்டிகள் மீட்டபோது, ஓட்டுநர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது காரில் இருந்தவர்கள், தங்களை போலீஸார் எனக் கூறி, விபத்து குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் கூறப்படுகிறது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் செங்கல்பட்டு தாலுகா போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சுரேஷ்குமார் (54), தினேஷ்குமார் (24) ஆகியோர் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மற்றொரு ஸ்விஃப்ட் கார், பணியில் இருந்த போலீஸார் மீது மோதியுள்ளது. இதில், தினேஷ்குமாருக்குத் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்,  சுரேஷ்குமார் லேசான காயமடைந்துள்ளார்.

இருவரையும் மீட்ட வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், மற்றொரு காவலர் சுரேஷ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், போலீஸார் மீது மோதிய காரை ஓட்டி வந்தவர் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான தீனா (33) என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது மறைமலைநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தை ஏற்படுத்திய பின்னர் தீனா தப்பிச் சென்றதாகக் கூறப்படும்கிறது. அவரைப் பிடிக்க போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police officer killed in Chengalpattu car accident


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->