தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக்கோரி 'இந்தியா’'கூட்டணி சார்பில் நாளை டெல்லியில் மாபெரும் கண்டன பேரணி..! - Seithipunal
Seithipunal


தேர்தல் வாக்கு திருட்டு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி 'இந்தியா' கூட்டணி நாளை டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளது. தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.  

கடந்த 10 மாதங்களில் தேர்தல் இணை ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக 14 முறை தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி சென்றனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 08 மணி நேரம் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜந்தர் மந்தர் மற்றும் ராஜ்காட் வரையிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், கடந்த 02 ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த பரப்பன சூழலில், நேற்று ஜந்தர் மந்தரில் சிஜேபி அமைப்பினர் தலைமையில் போராட்டம் நடத்தை இருந்த நிலையில் டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன், சிஜேபி நிறுவனர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறி, 'இந்தியா' கூட்டணி சார்பில் நாளை (அக். 12) மேம்படும் டெல்லியில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற உள்ளது. 

நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து விரிவான புகார் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி மக்களாட்சியை காக்க நீதித்துறை உடனடியாக இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது;

டெல்லி வீதிகளில் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் சுக்குநூறாக கிழிக்கப்பட்டு, ஜனநாயகம் நசுக்கப்படும் போது, சட்டத்தின் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் கண்களை கட்டிக்கொண்டு மவுனமாக அமர்ந்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலு, அரசியலமைப்பு சட்டம் சீரழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு நாங்கள் ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டோம் என்றும், இதற்கான பொறுப்புடைமை நிச்சயம் உறுதி செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The INDIA alliance will hold a protest rally in Delhi tomorrow demanding the resignation of the Chief Election Commissioner


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->