''தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி பேசியது இந்தி திணிப்பு''; மாணிக்கம் தாகூர் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


இன்று பிரதமர் மோடி, தொடக்கத்தில் ஓரிரு நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, பின்னர் இந்தியில் தொடர்ந்து பேசியது  இந்தி திணிப்பு என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையிலான வேறுபாடு தமிழ்நாட்டில் தெளிவாகத் தெரிகிறது. நேற்று, ராகுல் காந்தி தமிழ்நாட்டு மக்களிடம் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாற்றினார்.

இன்று மோடியும் தொடக்கத்தில் ஓரிரு நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, பின்னர் இந்தியில் தொடர்ந்து பேசிவருகிறார். இது இந்தி திணிப்பு.

தமிழ்நாடு தனது மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றில் பெருமை கொள்ளும் மண். எல்லா மொழிகளையும் வரவேற்கிறோம். ஆனால், ஒரு மொழியை மற்ற மொழி பேசும் மக்கள் மீது திணிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். ஒரு மொழியைக் கற்பது அவரவர் விருப்பம்; ஒரு மொழியைத் திணிப்பது அரசியல் நோக்கம்.

இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். ஒரு மொழியைத் திணிப்பதில் அல்ல, அனைத்து மொழிகளையும் மதிப்பதில்தான் இந்தியாவின் ஒற்றுமை அடங்கியிருக்கிறது. தமிழ் எங்கள் அடையாளம். மொழித் திணிப்புக்கு என்றும் இடமில்லை.'' என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manickam Tagore criticized the PM Modi remarks in Tamil Nadu as the imposition of Hindi


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->