மெரினா செல்லத் திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு...! திடீரென அனுமதி மறுப்பு... பின்னணி என்ன தெரியுமா...? - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், கடற்கரைப் பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினரும் ஏராளமான இளைஞர்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக டெல்லியில் பொதுப்போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.டெல்லியின் பல மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அப்புறப்படுத்த காவலர்கள் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் டெல்லியின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.டெல்லியில் தொடங்கிய போராட்டத்தின் தாக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதிகளில் உள்ள அனைத்து நுழைவுப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் மெரினா கடற்கரையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கடற்கரைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attention those planning visit marina Sudden denial permission Do you know what background


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->