சென்னையில் 20 செ.மீட்டர் மழை பெய்தாலும் தண்ணீர் வடியும்... மேயர் பிரியா பேட்டி!
chennai heavy rain mayor priya
சென்னை தண்டையார்பேட்டை, திருவிகா நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட 45 மற்றும் 71-வது வார்டுகளில் கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் ரூ.226.55 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை சென்னையின் மேயர் ஆர்.பிரியா நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து நெரிசலை குறைக்க பல பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்றும், கணேசபுரம் பாலமும் வரும் ஜனவரிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரயில்வே நிலத்தில் உள்ள 9 ஏக்கர் பரப்பளவிலான குளம் புதுப்பிக்கப்பட்டு, மக்கள் நடைப்பயிற்சிக்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழைக்கு மாநகராட்சி தயாராக இருப்பதாகவும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் மின்மோட்டார்கள் வைத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சாலைப் பணிகள் மழைக்குப் பிறகே செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், 15 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்தாலும் 24 மணி நேரத்துக்குள் தண்ணீர் வடியும் வகையில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
English Summary
chennai heavy rain mayor priya