வடபழனி முருகன் கோவில் விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
chennai hc new order to vadapalani murugan temple parking issue
சென்னை வடபழனி முருகன் கோவிலின் வடக்கு மாடவீதியில், வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை மறு உத்தரவு வரும் வரை மாநகராட்சி தொடரக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வடபழனி முருகன் கோவிலின் வடக்கு மாடவீதியில், வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை தடை செய்ய வேண்டும் என எஸ்.முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அவரின் அந்த மனுவில் "சென்னை வடபழனி முருகன் கோயில் வடக்கு மாடவீதி பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. 40 அடி அகலமுடைய வடக்கு மாடவீதியில் 18 அடி அகலத்துக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
மேலும், வடபழனி முருகன் கோயிலுக்காக வாகன நிறுத்தம் அமைக்க நான்கு இடங்களில் 150 கிரவுண்ட் நிலம் உள்ளது. அப்படி இருக்க ஆளுங்கட்சி பிரமுகரின் தலையீடு காரணமாக வடக்கு மாடவீதியில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வடபழனி வடக்கு மாடவீதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தொடரக் கூடாது மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் தெரிவித்துள்ளனர்.
English Summary
chennai hc new order to vadapalani murugan temple parking issue