நீதிபதியின் அந்த உத்தரவு! உயர்நீதிமன்ற மாடியில் இருந்து கீழே குதித்த 15 வயது சிறுமி!
chennai hc minor girl attempt suicide
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பெரும் அதிர்ச்சியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ஆள்கொணர்வு தொடர்பான வழக்கில் 15 வயது சிறுமி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் போது, சிறுமியை காப்பகத்துக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பில் அதிருப்தியடைந்த சிறுமி, திடீரென நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார். சம்பவம் நடக்கும் முன் சுற்றியிருந்தவர்கள் அவளை தடுத்துக்கொள்ள முடியாமல் போனது.
மாடியில் இருந்து கீழே குதித்ததில் கடுமையாக காயமடைந்த சிறுமியை காவல்துறையினர் உடனடியாக மீட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவசர சிகிச்சை அளித்தனர். தற்போது அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
English Summary
chennai hc minor girl attempt suicide