எறும்புகளை விரட்ட மண்ணெண்ணெய் ஊற்றி, தானே உயிரிழந்த பரிதாபம்.. சென்னையில் சோகம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அமைந்தகரை பெருமாள் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் சங்கீதா (வயது 27). இவர் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் நிலையில், தனது இல்லத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினத்தின் போது இரவு உறங்க செல்கையில், தனது படுக்கையறையை சுத்தம் செய்துள்ளார். 

அந்த சமயத்தில், எறும்புகள் அதிகமாக இருப்பதை காணவே, அவற்றின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். இதன்போது அவரது கைகளால் இருந்த பாட்டிலில் தீப்பற்றி, உடல் முழுவதும் தீ பரவியுள்ளது. 

இதனையடுத்து வலியால் பெண்மணி அலறவே, இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்மணி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக அமைந்தகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai girl died killed ant using Kerosene Oil


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal