கஞ்சா சப்ளை செய்ய பெண் கையாண்ட யுக்தி! அலேக்காக தூக்கிய சென்னை போலீஸ்!  - Seithipunal
Seithipunal


சென்னையில் ஸ்விக்கி உணவு டெலிவரி செய்வது போல், இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் ஓட்டுநர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையின் கிண்டி பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிண்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கிண்டி  போலீசார், வேளச்சேரி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்

அந்நேரம் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி சப்ளை செய்ய வந்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் மடக்கி சோதனை செய்த போது, உணவு டெலிவரி செய்யும் பையில் சுமார் 3 கிலோ கஞ்சா இருந்துள்ளது

இதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்தனர், அதில், அந்த பெண் மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வனிதா (32) என்பதும், இவர் பகுதிநேர கால் டாக்சி டிரைவராகவும், ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்யும் பணி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், இவர் கால் டாக்சி ஓட்டுநராக பணிசெய்தபோது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கஞ்சா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, 2 கைபேசிகள், 500ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai girl arrested for ganja supply


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal