சென்னை நடைபாதை திட்ட டெண்டர் ரத்து...! புதிய திட்டமா...? மறு டெண்டரா...?
Chennai footpath project tender cancelled New project Re tender
சென்னையில் ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கான டெண்டர்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிதி முறைகேடு சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மொத்தம் 35 டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.

இந்த திட்டங்களுக்காக தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்தபோது, அதில் பல அடுக்குகளாக குளறுபடிகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறிப்பாக, திட்டத்தின் மொத்த செலவு செயற்கையாக உயர்த்திக் காட்டப்பட்டிருப்பது அதிகாரிகள் கவனத்திற்கு வந்துள்ளது.மேலும், சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமான வகையில் டெண்டர் நிபந்தனைகள் வடிவமைக்கப்பட்டிருந்ததும் மாநகராட்சியின் உள்ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், திட்ட அறிக்கையில் தேவையற்ற கூடுதல் பணிகள் சேர்க்கப்பட்டு, அதன் மூலம் அரசுக்கு பெருமளவில் நிதி இழப்பை ஏற்படுத்த முயற்சி நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஒரு மீட்டர் நடைபாதை அமைப்பதற்கான செலவு வழக்கமான மதிப்பீட்டை விட சுமார் 4 மடங்கு அதிகமாக கணக்கிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, நடைபாதை திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை மீண்டும் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்றும், தேவையான திருத்தங்களுக்குப் பிறகே பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், டெண்டர் முறைகேடு குறித்த புகாரின் அடிப்படையில் தனிப்பட்ட விசாரணையும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai footpath project tender cancelled New project Re tender