சென்னையில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் வழக்கு!
Chennai Drug Smuggling 4 arrest
மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை கடத்தியதற்கான வழக்கில் தலைமறைவாக இருந்த நான்கு பேர் சேர்த்து மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13ம் தேதி, கொத்தவால்சாவடி போலீஸார் மின்ட் தெருவில் கண்காணிப்பு பணியில் இருந்த போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு இளைஞரை விசாரித்தனர்.
அவரிடம் பதட்டமான பதில்கள் வந்ததையடுத்து அவருடைய கைபையை சோதனையிட்டபோது, மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த மணிஷ்குமார் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், பூக்கடை பகுதியைச் சேர்ந்த ரோஹித்குமார் (25) என்பவரும் தொடர்புடையவராக தெரிய வந்ததால், அவரும் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவர்களின் விசாரணையின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த கொத்தவால்சாவடியை சேர்ந்த தர்ஷன் (25), ஏழுகிணறு அமீத் அஃபாத் (26), திருவல்லிக்கேணி முகமது சித்திக் (35), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்லா (39) ஆகிய நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
விசாரணைக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
English Summary
Chennai Drug Smuggling 4 arrest