சென்னை: வேலை கொடுப்பதாக அழைத்து சென்று, சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள கோவளம் பகுதியை சார்ந்த 40 வயது பெண்மணி, தனது 15 வயது மகளை வீட்டு வேலைக்கு செல்ல கூறி, வியாசர்பாடியை சார்ந்த உறவினர் சகிதா பானு (வயது 22) என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். 40 வயது பெண்மணி கணவரை பிரிந்து வறுமையில் வாடிவந்ததால், மகளை வீட்டு வேலைக்கு அனுப்பும் சோகத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மகளை அழைத்து சென்ற உறவினர், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இந்த விஷயம் சிறுமியின் தாயாருக்கு தெரியவரவே, இது குறித்து அங்குள்ள வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், அங்குள்ள வண்ணரபேட்டை சஞ்சீவிராயன் கோவில் பகுதியை சார்ந்த மதன்குமார் (வயது 35) என்பவருக்கும், சகிதா பானுவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருப்பதும், இவர்கள் சிறுமிகளை கடத்தி வந்து அல்லது நயவஞ்சகமாக வேலை கொடுப்பதாக ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையில், மதன்குமார் தாயார் செல்வி (வயது 50), அவரது தங்கை சத்தியா (வயது 23) ஆகியோர் சேர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய புரோக்கர்கள் கார்த்திக் (வயது 23), மகேஸ்வரி (வயது 29), வனிதா (வயது 35), ஈஸ்வரி (வயது 19), விஜயா (வயது 45), திலிப் (வயது 25) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Child Forced Prostitution 10 Brokers arrest by Police 12 November 2020


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal