சென்னையில் மினி பேருந்து மோதியதில் 12 வயது சிறுவன் பலி!
chennai bus accident 12 age boy death
திருவொற்றியூர்: எர்ணாவூரில் உள்ள, லிப்ட் கேட் பகுதியை சேர்ந்தவர் பசலுதீன். இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். மகன் அமீதுதீன் (வயது 12). இவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அமீதுதீன் நேற்று இரவு எர்ணாவூரில் வடக்கு பாரதியார் நகரில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த போது, அதே வழியாக வந்த தனியார் மினி பேருந்து அமீதுதீன் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்த, அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். .
அங்கு, சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த விபத்து குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் தலைமை காவலர் வள்ளி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றார்.
English Summary
chennai bus accident 12 age boy death