நாளை நடைபெற இருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!
Chennai Anna University exams scheduled for tomorrow postponed
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக நாளை சென்னை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வுகள் நாளை நடைபெறாது என்றும் தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
English Summary
Chennai Anna University exams scheduled for tomorrow postponed