நாளை 2 மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Chennai and Kanchipuram district Tomorrow school working day
கடந்த டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி இயங்கும் நாட்களை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாளை சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் செவ்வாய்க் கிழமை பாட வேளையிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழன் பாட வேளையினைப் பின்பற்றியும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai and Kanchipuram district Tomorrow school working day