கிளிப்பிள்ளை போல செயல்பட்ட பெண்.. குரங்காக மாற்றிய சென்னை டாக்ஸ்.. விசாரணைக்கு அச்சம்.! பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிக்கு வரும் பெண்கள், உடற்பயிற்சி செய்ய செல்லும் பெண்களை ஆபாசமாக பேட்டியெடுத்த விவகாரத்தில் " சென்னை டால்க்ஸ் " என்ற யூ டியூப் நிறுவனம் சிக்கியுள்ளது. பெண்களின் அந்தரங்கம் தொடர்பான ஆபாச விடியோக்கள், முதல் முதலாக மேற்கொண்ட தாம்பத்தியம் யாருடன்? என்று பல கேள்வியுடன் பெண்களை பரபரப்பாக கேள்வி கேட்டு விடீயோக்களை வெளியிட்டு வந்தனர்.

சிலர் தங்களின் பேச்சு யூ டியூப் விடீயோக்களில் வெளியாகுவது கூட தெரியாமல் இயல்பாக பேசிவிட்டு, பின்னர் வீடியோ வெளியானதும் சிக்கலில் சிக்கியுள்ளனர். மேலும், பேட்டி எடுக்கிறோம் என்பதை கூட தெரிவிக்காமல், விடீயோக்களை பதிவு செய்துள்ளனர். கடந்த 2019 ஆம் வருடத்தில் தொடங்கப்பட்ட சென்னை டால்க்ஸ் யூ டியூப் சேனல் நிறுவனம், அதிகளவிலான பார்வையாளர்களை தன்பக்கம் ஈர்க்க ஆபாச பேட்டி எடுத்து ஒளிபரப்பியுள்ளனர். 

மொத்தமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட விடியோக்கள் எடுத்துள்ள நிலையில், இதன் மூலமாக வருமானமும் பார்த்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிய பெண்கள் காவல் நிலையத்தில் புகார்களும் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தினேஷ் (வயது 31), ஆசின் பாஷா (வயது 23), அஜய் பாபு (வயது 24) ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்கள் தற்போது சிறையில் உள்ளனர்.

இதனையடுத்து சென்னை டால்க்ஸ் நிறுவனத்தை சீல் வைத்த நிலையில், அவர்களின் யூ டியூப் சேனலை முடக்கும் பணியையும் காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்கள் பதிவு செய்த விடீயோக்களில் நடித்த சில பெண்களுக்கு, ரூ.1500 ஊதியம் கொடுத்து ஆபாசமாக பேச வைத்து பேட்டி எடுத்ததும் அம்பலமாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான வீடியோவில் பேசிய பெண்மணி கூட ரூ.1500 பணம் வாங்கிவிட்டு பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதுபோன்று பெண்களை பேச வைத்து எடுத்துள்ள பேட்டியை வைத்து, பிற பெண்களிடம் அவர்களே பயம் இல்லாமல் பேசியுள்ளனர் என்று ஆசை வார்த்தை கூறி, அப்பாவி பெண்களின் மனதையும் கெடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வைரலான பேட்டியில் உள்ள பெண்ணை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சம்பன் வழங்கியுள்ளனர். விரைவில் அவரும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், இந்த பெண்மணி மற்றொரு தனியார் யூ டியூப் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நான் பேசியதற்காக அவர்களே ரூ.1500 கொடுத்தார்கள். நான் கின்னஸ் ரெக்கார்ட் சாதனை செய்த பெண். இந்தியா டுடே நாளிதழில் பல சாதனைகள் செய்த பெண் என்று செய்தியே வெளியாகியுள்ளது என்று தெரிவித்தார். நானே பேசிவிட்டு நானே புகார் கொடுத்துள்ளேன் என்றும் தெரிவித்தார். ஆனால், காவல்துறை தரப்பில் பெண் தாமாக முன்வந்து புகார் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் பல விஷயங்கள் மர்மமாக உள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Abused Speech Video Trending girl May be Arrest


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal