‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது? உண்மையை சொல்ல முடியாது..சொன்னாலும் உங்களால போட முடியாது-எச்.வினோத்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்த கடைசி திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டியிருந்த நிலையில், பல மாதங்களாக தாமதமாகி வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக வெளியீட்டை தள்ளிவைத்ததாக தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.

இதற்கிடையில், ஜூன் 19-ஆம் தேதி படம் வெளியாகும் என்ற தகவல்கள் பரவியதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அந்த தேதியில் வேறு படம் வெளியாகும் என அறிவித்ததால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

தற்போது விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி ஜூன் மாத இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் படம் வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ஹெச். வினோத்திடம், ‘ஜனநாயகன்’ வெளியீடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர்:“படம் வரும்போது வரும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரிலீஸ் தேதி நம் கையில் இல்லை,” என்றார்.

அதனைத் தொடர்ந்து அவர் கூறிய கருத்து மேலும் கவனத்தை ஈர்த்தது.“உண்மையைச் சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. ஒருவேளை எனக்கு அந்த தைரியம் வந்தாலும், அதை அப்படியே வெளியிடும் தைரியம் உங்களுக்கு இருக்காது. அதனால் படம் வரும்போது பார்ப்போம்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பதில் நிகழ்ச்சியில் இருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஏன் தொடர்ந்து தாமதமாகிறது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தேர்தலுக்கு முன்பே படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது இயக்குநர் ஹெச். வினோத் கூறிய கருத்துகள், படத்தின் வெளியீட்டு தாமதத்திற்கு பின்னால் வேறு காரணங்கள் இருக்கிறதா என்ற புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்பாக உருவான கடைசி திரைப்படம் என்பதால் ‘ஜனநாயகன்’ மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் அல்லது படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் தொடர்கிறது.

இதனால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது கோலிவுட்டின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

When will Janayakan release I canot tell the truth even if I did you wouldn't be able to do it H Vinoth


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->